fbpx

“என்னோட புருஷன் இருந்தா, நம்ம லவ் பண்ண முடியாது” ரயில் தண்டவாளத்தில் நடந்த கொடூர சம்பவம்..

மதுரை சோழவந்தானில் உள்ள ரயில் தண்டவாளத்தில், முகம் சிதைந்த நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரயிலில் அடிபட்டு அந்த நபர் இறந்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரேத பரிசோதனையில், இறந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இறந்த நபர் ஒட்டன்சத்திரம், இடும்பன்குரும்பட்டி பகுதியை சேர்ந்த சக்திகணேஷ் என்பது தெரியவந்துள்ளது. எலெக்ட்ரிசியனாக வேலை செய்து வரும் இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவர், அவரது மனைவி பரமேஸ்வரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இவர்களின் வீட்டில், சக்தி கணேஷின் தூரத்து உறவினர் கண்ணன் தங்கி பெயிண்டர் வேலை ஸெஇதுஹ் வந்துள்ளார். அப்போது, கண்ணனுக்கும் பரமேஸ்வரிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், இவர்களின் தொடர்பு குறித்து சக்தி கணேஷுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், இதுகுறித்து இருவரிடமும் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி, அவரது கள்ளக்காதலன் கண்ணனுடன் சேர்ந்து அவரது கணவர் சக்தி கணேஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அவர்கள் போட்ட திட்டத்தின் படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளம் அருகே சக்தி கணேஷும் கண்ணனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், இதில் ஆத்திரமடைந்த கண்ணன், சக்தி கணேஷை கொலை செய்துள்ளார்.

பின்னர், அவரது முதத்தை சிதைத்து பின்பு அவரது உடலை தண்டவாளத்தில் வீசியுள்ளார். இதனையடுத்து, போலீசார் கொலை செய்த கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Read more: ஏ.ஆர்.ரகுமான் டைமண்ட்.. அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீங்க..!! – விவாகரத்து குறித்து விளக்கம் அளித்த சாய்ரா பானு

English Summary

woman-planned-to-kill-her-husband

Next Post

தந்தையின் கண் முன், போலீசாக இருக்கும் மகளுக்கு நேர்ந்த கொடூரம்...

Sun Nov 24 , 2024
woman-was-stabbed-to-death-in-front-of-her-father

You May Like