fbpx

“இளம் பெண் கதற கதற..”! நிர்வாணப்படுத்தி சாராயம் ஊற்றி எரித்துக் கொலை.!பாஜக ஆளும் மாநிலத்தில் மீண்டும் கொடூரம்.!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் நிர்வாண சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டு அதன் பிறகு எரித்து கொலை செய்யப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. மேலும் குற்றவாளிகள் சாட்சியங்களை அழிப்பதற்காக அந்த பெண்ணை எரித்து கொலை செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் முகம் முழுவதுமாக எரிந்து கருகிப் போய் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

மேலும் அந்தப் பெண் சாராயம் ஊற்றி எரிக்கப்பட்டதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சோசியல் மீடியா யூஸ் பண்ணும்போது கவனம்..!! இதுவரை 36,838 இணைய முகவரிகளை பிளாக் செய்த மத்திய அரசு..!!

Mon Dec 11 , 2023
2018 – 2023 அக்டோபர் மாதம் வரை சமூக ஊடக நிறுவனங்களில் 36,838 இணைய முகவரிகளை பிளாக் செய்யுமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளதாக அத்துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளி மாநிலங்கள் உடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கை சீர் குலைக்கும் விதமான அல்லது குற்றங்களைத் […]

You May Like