fbpx

“ச்சீ.. நீயெல்லாம் ஒரு அப்பா..” 15 வயது மகளிடம் பாலியல் சேட்டை.! தந்தை மீது பரபரப்பு புகார்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் தன் மகளிடமே தவறான முறையில் நடந்து கொண்ட தந்தையை கைது செய்யக்கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் குழந்தையின் தாய் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உறுதியளித்திருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ஊர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் முருகன். இவர் பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். திருமணமான இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் வயதிற்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் செல்வ முருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணவேணி அவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது இளைய மகள் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியாக இல்லாமல் அவதிப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் வந்த தந்தை செல்வம் முருகன் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் .

எனினும் அந்தப் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது தந்தை மற்றும் மகளுடன் வந்து புகார் மனுவை அளித்தார். தனக்கும் தனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லை எனவும் இந்த புகார் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கும் படியும் காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சபரிமலை செல்வதற்கு முன் ஐயப்ப பக்தர்கள் இதை செய்ய வேண்டும்!… சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

Tue Dec 5 , 2023
நோய்களுக்கு சிகிச்சை பெறும் சபரிமலை பக்தர்கள், விரதம் துவங்கிய பிறகும், மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். சபரிமலை செல்லும் போது சிகிச்சை பதிவுகள் மற்றும் மருந்துகளையும் உடன் எடுத்து வர வேண்டும்’ என, மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்களுக்காக, அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் தலைமை அரசு மருத்துவமனைகளில், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தை மையப் பகுதியாக கொண்டு, சபரிமலை […]

You May Like