fbpx

“பெயில் ஆனவன எல்லா, என்னால கல்யாணம் பண்ண முடியாது”; மணமேடையில், மணமகள் எடுத்த முடிவு..

உத்தரப்பிரதேசம் மாநிலம், சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ளது முஸ்த்பாபாத் கலா கிராமம். 28 வயதான ஜெயமாலா என்ற பெண் ஒருவர் இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த பெண்ணிற்கும் டெல்லியில் கூலி வேலை செய்து வரும் 30 வயதான இளைஞர் ஒருவருக்கும், கடந்த நவம்பர் 17-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, அந்த நபரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கடைசி நேரத்தில் மணமகள் கூறியுள்ளார். இது குறித்து விசாரித்த போது, தான் பட்டப்படிப்பு முடித்துள்ளதாகவும், ஆனால் மணமகன் 10-ம் வகுப்பு ஃபெயிலானதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதனால் தான் அந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மணப்பெண் உறுதியாக கூறியுள்ளார். மேலும், மணமகன் மனவளர்ச்சி குன்றியிருப்பதாகவும் மணப்பெண் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பும் மணமகளிடம் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லாததால், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சமாதானம் கூறியும் அந்த பெண் கேட்காததால், அந்த திருமணம் பாதியில் நின்றது. மேலும், வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை பெண் குடுமபத்தினரிடம் மணமகன் வீட்டார் திரும்ப ஒப்படைத்து விட்டு சென்றனர்.

Read more: உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?? அப்போ கண்டிப்பா இதை பண்ணுங்க…

English Summary

woman-stopped-her-marriage-in-stage

Next Post

ஒரே வாலிபருடன், 4 சிறுவர்கள் ஓரினசேர்க்கை; செங்கல் சூளையில் நடந்த அசிங்கம்...

Sat Nov 23 , 2024
4-boys-had-homosexual-relationship-with-a-young-man

You May Like