புதுச்சேரியில் வீட்டை காலி செய்யுமாறு கூறியதால் வீட்டின் உரிமையாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பின் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி ஆரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். 50 வயதான இவர் பேன்சி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு குமுதா என்ற பெண் பூஜைக்கான பூக்களை விற்பனை செய்து வந்துள்ளார். நீண்ட காலமாக கடைக்கு பூக்களை விற்பனை செய்து வருவதால் அந்த பெண்மணிக்கு தேவையான உதவிகளை செய்து வந்திருக்கிறார் சுகுமாரன்.
தனது மகள் கணவரை விட்டு பிரிந்து தன்னுடன் வசித்து வருவதால் இரண்டு பேத்திகளுடனும் வாழ்வதற்கு வீட்டில் போதுமான இடம் இல்லை என குமரன் தான் தெரிவித்திருக்கிறார் குமுதா. இதனைத் தொடர்ந்து தனது மனைவி பெயரில் இருக்கும் வீட்டில் தங்கைக்கு உள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் சுகுமாரன். மேலும் அந்த வீட்டின் ஒரு பகுதி குடோனாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறார் சுகுமாரன். அப்போது அறிமுகம் இல்லாத ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து குமுதாவையும் ஜீவிதாவையும் கண்டித்த அவர் வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குமுதா ராஜகுமாரன் கடையில் இருக்கும் போது அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுகுமாரன் அளித்த புகாரின் பேரில் குமுதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.