தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் நவீன். இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். பட்டியலின பிரிவைச் சேர்ந்த நவீன், நெய்வவிடுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பல்லடம் பகுதியில் உள்ள தறி மில் ஒன்றில் ஐஸ்வர்யா வேலை செய்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐஸ்வர்யாவின் பெற்றோர் தங்களின் மகள் இருக்கும் இடத்திற்கு ஜனவரி 2ஆம் தேதி சென்றுள்ளனர். ஆனால், டிசம்பர் 31ஆம் தேதி காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் இது தொடர்பாக பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி 7ஆம் தேதி, நவீன் வட்டத்தி கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஐஸ்வர்யாவை என்னிடமிருந்து பிரித்து அழைத்து சென்று, அவரை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். மேலும், யாருக்கும் தெரியாமல் அவரை எரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யாவின் பெற்றோர் பெருமாள், ரோஜா பெருமாளின் உறவினர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜனவரி 2ஆம் தேதி இரவு, பல்லடத்தில் இருந்து ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்ற அவரது பெற்றோரும் உறவினர்களும், நேராக அவரை புளிய மரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். பின்னர், மரத்தின் கிளையில் தூக்கு போடுவது போல் பெருமாள் போட்டுள்ளார். மேலும், நீயே தூக்கு மாட்டிக் கொள் என கூறியுள்ளார். இதனால் ஐஸ்வர்யா வேறு வழி இல்லாமல் கழுத்தில் கயிரை மாட்டிக் கொண்டுள்ளார். இதையடுத்து, பெருமாள் நாற்காலியை உதைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் உயிருக்கு போராடியுள்ளார்.
அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி, ஐஸ்வர்யாவின் பெரியம்மா ஒருவர் கயிறை அரிவாளால் வெட்டியுள்ளார். ஆனால் கீழே விழுந்த ஐஸ்வர்யாவின் உடலில் உயிர் இருந்துள்ளது. இதனால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பெருமாளும், ரோஜாவும் கூறியுள்ளனர்.