28 வயது இளம் பெண் ஒருவர், கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல் பகுதியில் வசித்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இளம்பெண் தனது குழந்தைகளை விட்டுவிட்டு அவர் மட்டும் அவரது தாய் வீட்டிற்க்கு சென்றுள்ளார். தாய் வீட்டில் இருந்த அவர், கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆம்பூரில் உள்ள அவரது கணவரின் சொந்தக்காரர் ஒருவர், கேரளா மாநில வானத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
உறவினர் என்ற முறையில், இருவரும் பழகி வந்த நிலையில், இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், அந்த பெண் தன் கனவனை வெறுப்பேற்ற முடிவு செய்துள்ளார். இதனால் அந்த இளம்பெண், தனது கள்ளக்காதலனோடு செல்பி எடுத்து, அதை தனது கணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், தங்களுக்கு பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் கள்ளக்காதலர்கள் இருவரும், கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
Read more: முந்திரி காட்டிற்குள் கேட்ட அலறல் சத்தம்; விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி பெண் பலாத்காரம்..