fbpx

“ஒரு ஆம்பள பிள்ளைய பெக்க உனக்கு துப்பில்ல”; தாயுடன் சேர்ந்து கணவர் செய்த கொடூரம்.. 2 பெண் பிள்ளைகளை பெற்ற தாய்க்கு நேர்ந்த சோகம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சுதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கண்ணன் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் சுதாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இரண்டுமே பெண் குழந்தையாக பிறந்ததால், ஆண் பிள்ளையை பெற துப்பில்லை என்று கூறி சுதாவின் மாமியார் அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல் மாமியார் சுதாவை துன்புறுத்தி உள்ளார். மேலும், சுதா வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்ததாக அவரது கணவர் சுதாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாவின் உறவினர்கள், கண்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உமாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுதாவின் உடலை மேட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்க்கிடையே சுதாவின் உறவினர்கள், சுதாவின் கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் சுதாவை துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுகின்றனர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் சமாதானம் பேசி அனுப்பியுள்ளனர். சம்பவம் குறித்து சுதாவின் மூத்த சகோதரி கூறியதாவது, “சுதாவிடம் சொத்து கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தாய் வீட்டிற்கு அனுப்பாமல் யாருடனும் எந்த தொடர்பிலும் இல்லாமலும் சுதா இருந்துள்ளார். அவருக்கு இரண்டும் மகள்களாக இருப்பதால் சுதாவை கொடுமை படுத்தியும் வந்துள்ளனர்” என்றார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுதாவின் கணவர் மற்றும் மாமனாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Read more: இயந்திரத்தில் சிக்கிய, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கை!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

English Summary

woman-who-gave-birth-to-2-daughters-was-died

Next Post

நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்... இப்படி மட்டும் சாப்பிடாதீங்க...

Thu Nov 21 , 2024
amla-should-not-be-taken-in-this-form

You May Like