fbpx

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்; காதலனுடன் சேர்ந்து வாழ நினைத்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..

ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதான நரேஷ். கசாப்பு கடையில் வேலை செய்து வரும் இவர், 24 வயது இளம் பெண் ஒருவருடன் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் லிவ் – இன் முறையில் வசித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், இவர் மீண்டும் ஜார்கண்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற இவர், தனது காதலியிடம் எதுவும் சொல்லாமல், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர், அவரது மனைவியை தனது ஊரிலேயே விட்டுவிட்டு, மீண்டும் தமிழகத்திற்கு வந்த அவர், தனது காதலியுடன் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். அப்போது, அவரது காதலி நானும் உன்னோடு உனது வீட்டிற்க்கு வந்து உன்னோடு வாழ்கிறேன் என்று அடம்பிடிதுள்ளார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நரேஷ், தனது காதலியை தனது சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அவரது காதலியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல நரேஷ் விரும்பவில்லை. இதனால், அவர் தனது காதலியை ஜோர்டாக் கிராமம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, காட்டு மிருகங்கள் உடல்பாகங்களை தின்றுவிடும் என நினைத்து, அந்த பெண்ணின் உடலை 50 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்த நரேஷ், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். இதனிடையே, கொலை செய்யப்பட்ட இளம் பெண், தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் போது, தான் ரயில் ஏறிவிட்டதாகவும், தனது காதலனுடன் சேர்ந்து வாழ போவதாகவும் தனது தாய்க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், இளம்பெண்ணின் உடல்பாகங்களை காட்டுப்பகுதியில் இருந்து கைப்பற்றிய காவல்துறையினர், அந்த பெண்ணின் ஆதார் அட்டையை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதில் இருந்த அந்த பெண்ணின் முகவரியின் மூலம், அவரது தாயை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். கொல்லப்பட்டது தனது மகள் தான் என அவரது தாய் உறுதி செய்துள்ளார். மேலும், நரேஷ் உடனான பழக்கம் தொடர்பாகவும் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து நரேஷை கண்டு பிடித்து காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தனது காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

Read more: இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி இருக்கா? அப்போ இந்த கஞ்சியை குடிங்க.. உங்களுக்கே மாற்றம் தெரியும்..

English Summary

woman-who-was-in-living-together-relationship-was-killed-by-her-lover

Next Post

Viral Video | இரண்டு வருடமா வேறொரு பெண்ணுடன் உல்லாசம்.. கணவனுக்கு மனைவி கொடுத்த விசித்திரமான தண்டனை..!!

Thu Nov 28 , 2024
Cheating husband walks through mall wearing ‘I had affair’ sign as wife looks on. Watch

You May Like