fbpx

அட பாவமே.! கள்ளக்காதலனை வீட்டில் குடி வைத்து கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி.! கொடூர முடிவு.!

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் கள்ளக்காதல் காரணமாக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்திலுள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவம் குப்தா26). பைக் டாக்சி டிரைவராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும் இரண்டு வயதில் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவரது மனைவி பிரியங்கா பக்கத்து வீட்டைச் சார்ந்த கர்ஜன் யாதவ்(23) என்ற இளைஞருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.

இந்த உறவை சிவம் யாதவ் கண்டித்ததால் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா கள்ளக்காதலன் கர்ஜன் யாதவ் உடன் வசித்து வந்தார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா உடன் சமாதானம் பேசி அவரை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் சிவம் குப்தா. மேலும் கள்ளக்காதலனான கர்ஜன் யாதவும் தங்களுடன் ஒரே வீட்டில் வசிப்பார் என்ற நிபந்தனையுடன் பிரியங்கா சிவம் குப்தாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பிரியங்கா விற்கும் அவரது கணவர் சிவம் குப்தாவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த கள்ளக்காதலன் உதவியுடன் தனது கணவரை தலையணையால் முகத்தை அழுத்தியும் கத்தியால் குத்தியும் இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிவம் குப்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரியங்கா மற்றும் கர்ஜன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Post

"கத்திரிக்கோலால் சதக்".! செல்போன் தராத கணவருக்கு நேர்ந்த கொடூரம்.! மனைவி கைது.!

Fri Dec 29 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தில் செல்போன் தராத கணவனை மனைவி கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருக்கும் காவல்துறையினர் மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் அங்கீத். இவரது மனைவி பிரியங்கா. யூடியூபில் பாடல்களைப் பார்ப்பதற்காக செல்போனை தருமாறு கணவனிடம் பிரியங்கா கேட்டிருக்கிறார். இதற்கு அவரது கணவர் அங்கீத் மறுத்ததாக […]

You May Like