நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவருடைய மனைவி துர்காதேவி(38) துர்கா தேவி கடந்த 18ஆம் தேதி இரவு வெளியே செல்வதாக மீண்டும் மீண்டும் திரும்பவில்லை இதனால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் புஷ்பவனம் கடற்கரையில் தலையில் ரத்த காயத்துடன் துர்காதேவியின் சடலம் கிடந்தது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் துர்கா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது துர்கா தேதியுடன் புஷ்பவனம் அழகுகண்டார் காட்டை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவரின் மகன் அருண்(20) என்பவர் உடன் பேசி வந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில், காவல் துறையினர் அருணை விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது அருண் வாட்ஸ் அப்பில் மளிகை பொருட்கள் விற்கும்போது கடந்த மே மாதம் துர்கா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் துர்கா தேவிக்கு அவ்வப்போது அருண் பணமும் கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் புஷ்பவனம் கடற்கரையில் அருண் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது துர்கா தேவி அருணிடம் 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாத செயல் தற்போது துர்கா தேவி பணம் கொடுக்காவிட்டால் நமக்குள் இருக்கும் உறவை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அருண், துர்கா தேவியை கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அருண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.