fbpx

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் மகளிர் உரிமை மாநாடு….! முக்கிய தலைவர்கள் பங்கேற்பு, ஏற்பாடுகள் தீவிரம்….!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, திமுகவின் மகளிர் அணியின் சார்பாக, சென்னை நந்தனம் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டியதும், பெண்ணுரிமை பற்றி பேசுவதும் காலத்தின் தேவையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுகவின் மகளிர் அணி சார்பாக, மகளிர் உரிமை மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், அக்டோபர் மாதம் 14ஆம் தேதியான நாளைய தினம் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளன பொதுச் செயலாளர் ஆனி ராஜா போன்ற இந்தியா கூட்டணியின் பல முக்கிய தேசிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதன் காரணமாக, இந்த மாநாட்டிற்கான அனைத்து வித ஏற்பாடுகளையும், திமுகவின் மகளிர் அணி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். தேசிய அளவிலான பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுக் கொள்ள இருப்பதால், தலைநகர் சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

திருப்பதியில் பிரம்மோற்சவம், 13 நாட்களுக்கு, தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!

Fri Oct 13 , 2023
திருப்பதியில் பிரமோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, இன்று முதல், தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் சிரமங்களை போக்கும் விதத்தில், சென்னை,தஞ்சை,திருச்சி,கோவை, மதுரை,காரைக்குடி,கும்பகோணம்,புதுவை போன்ற பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலமாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, மேலாண் இயக்குனர் […]

You May Like