fbpx

பெண்ணின் மூளையில் கூடுகட்டி வாழ்ந்த புழுக்கள்!… ஆபத்தான பாக்டீரியாக்கள், வைரஸ்கள்!… நிபுணர்கள் எச்சரிக்கை!

வியட்நாமில் பெண் ஒருவரின் மூளை மற்றும் உடலுக்குள் புழுக்கள் நெளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ஆபத்தான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தாய்லாந்தில் 58 வயதான அன் பின்ஹ் என்ற பெண், சமைத்த மாட்டிறைச்சி மற்றும் பச்சை இரத்தத்தால் செய்யப்பட்ட “Tiet canh” என்ற பிராந்தியத்தின் பிரபலமான உணவை உட்கொண்டுள்ளார். இதையடுத்து, சிலமணி நேரத்தில் அவரது உடலில் புழுக்கள் நெளிவதாக தெரிந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மருத்துவரிடம் சென்றார். அங்கே ஒருவரின் தோலுக்கு அடியில் ஒட்டுண்ணி புழுக்கள் நீந்துவதும், அவரது மூளைக்குள் புழுக்கள் கூடி கட்டி வாழ்ந்து கொண்டிருப்பதையும் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணை ஸ்கேன் செய்து பார்த்ததில், அவருக்கு உண்மையில் ஒட்டுண்ணிப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. புழுக்கள் அவளது மூளையில் கூடு கட்டியிருந்தன மற்றும் அவளது கைகால்களில் திரண்டிருந்தன என்று மிரர் தெரிவித்துள்ளது. இவரை சோதிக்க Dang Van Ngu மருத்துவமனையின் துணை இயக்குநர் Dr Tran Huy Tho, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கா விட்டால், அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கலாம் என்றும், பச்சை ரத்தத்தினால் செய்யப்பட்ட உணவு காரணமாக அவருக்கு புழுத் தொல்லை ஏற்பட்டது என்றும் கூறினார்.

இது குறித்து உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், மாதத்திற்கு ஒருமுறை தான் பச்சை ரத்த புட்டு சாப்பிடுவதாக ஒப்புக்கொண்டார். தானே அதனை தயாரித்து சாப்பிட்டதாகவும், அதனால் எந்த நோயும் இருக்காது என்று நினைத்தேன். ஆனால், சமைக்கப்படாத ரத்தம் அதில் இருந்ததால் இந்த உணவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

கார்ல இருந்து இறங்குனது ஒரு குத்தமா?... நடுரோட்டில் மனைவியை விட்டுவிட்டு 160 கி.மீ சென்ற கணவன்!...

Mon Apr 17 , 2023
தாய்லாந்தில் சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்து இறங்கியது தெரியாமல், மனைவியை நடுரோட்டில் விட்டுவிட்டு கணவர் 160 கி.மீ., பயணித்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் மகா சராகாம் மாணகத்தை சேர்ந்த பூன்டோம் சாய்மூன்-அம்னுவாய் தம்பதி. இவர்கள் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில், அதிகாலை 3 மணியளவில் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கணவர் கழிக்க வேண்டும் என வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். அப்போது, அவரின் […]

You May Like