தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வரும் 22ஆம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரள கடலோர பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடலிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. ஜூன் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்து.
குறிப்பாக, சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதற்கிடையே, சென்னையில் பகல் நேரத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு வரும் 22ஆம் தேதி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
Read More : அடேங்கப்பா..!! பிரேம்ஜி – இந்து தம்பதியின் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா..?