தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றிய நிலையில், தமிழ்நாடு குறித்து ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. அதில், பதிவான ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன. தேசியளவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருடன் கூட்டணி வைத்து மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே தான், தமிழ்நாடு குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசியது இதுதான். ”இந்த நாட்டிற்கு மொத்தம் இரண்டு விஷன்கள் உள்ளன. ஒரு பார்வை தான் இந்த தேசம் மாநிலங்களால் ஆனது என்பது. இதில் உரையாடல் அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவே அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
அதாவது நான் தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரனிடம் சென்று, ‘உனக்கு என்ன வேண்டும்?’ எனக்குத் தேவைப்படுவது’ என்று கேட்பேன். அதற்கு அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்வார். அவர் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்பார். அதை நான் சொல்வேன். ஒரு பாட்னர்ஷிப் போலவே இது செயல்படும். இது ஒன்றும் மன்னராட்சி இல்லை. அதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள். இதன் காரணமாகவே நான் சொல்கிறேன். உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒருபோதும் தமிழக மக்களை ஆள மாட்டீர்கள். அதை உங்களால் செய்ய முடியாது” என்று பேசியிருந்தார்.
Read More : தொடர் தோல்வி..!! மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த பாமக..!! பாஜகவுடன் கூட்டணி தொடருமா..?