இந்தியாவில் பிறந்த அனைவரையும் இந்து என்று குறிப்பிட வேண்டும் என்றும், தன்னையும் இந்து என்று அழைக்க வேண்டும் என்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற இந்து மாநாட்டில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ” அலிகர் பல்கலைக்கழகத்தை நிறுவியரும் சீர்திருத்தவாதியும், கல்வியாளருமான சர் சையது கானின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.. ஆர்ய சமாஜ் உறுப்பினர்களிடம் பேசிய சையது கான், தன்னை ஏன் இந்து என்று அழைக்கவில்லை என்று கேட்டதாகவும், அவர் “இந்து” என்பதை மதச் சொல்லாக கருதவில்லை என்றும் தெரிவித்தார்…
“ஆனால், உங்கள் மீது (ஆர்ய சமாஜ் உறுப்பினர்கள்) எனது கடுமையான புகார் என்னவென்றால், நீங்கள் ஏன் என்னை இந்து என்று அழைக்கவில்லை? நான் இந்து என்பதை ஒரு மதச் சொல்லாகக் கருதவில்லை… இந்து என்பது புவியியல் சொல் என்று சையது கான் அன்று கூறினார்.. இன்று நானும் அதையே கூறுகிறேன்…
இந்தியாவில் பிறந்தவர்கள், இந்தியாவில் விளையும் உணவை உண்டு வாழ்பவர்கள், இந்தியாவின் நதிகளில் இருந்து நீரைக் குடிப்பவர்கள் எவரும் தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ள தகுதியுடையவர்.. எனவே நீங்கள் என்னை இந்து என்று அழைக்க வேண்டும்.. காலனித்துவ காலத்தில் இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கியர் போன்ற சொற்களை பயன்படுத்துவது “மிகச் சிறந்தது”.. ஏனெனில் ஆங்கிலேயர்கள் குடிமக்களின் சாதாரண உரிமைகளைக் கூட தீர்மானிக்க சமூகங்களை அடிப்படையாக வைத்திருந்தனர்..” என்று தெரிவித்தார்..