இன்றைய இளம் தலைமுறை தம்பதியினர் கைக்குழந்தையோடு வெளியே செல்லும்போது, பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. ஆகவே அவர்கள் எந்த விதமான சிரமமும் இன்றி கைக்குழந்தையோடு வெளியே சென்று வருவதற்கு, தேவைப்படுவது என்னென்ன என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது கைக்குழந்தையுடன் வெளியில் செல்லும்போது ஒரு சில விஷயத்தில் நிச்சயமாக கவனமுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். அதிலும் குறிப்பாக அந்த குழந்தைக்கு தேவையான பொருட்களை தனியாக ஒரு பையில் எடுத்து வைத்துக் கொள்வது மிக, மிக அவசியம்.
அதோடு, அந்தப் பையில் வெந்நீர் அல்லது சுத்தமான குடிநீர், கை குட்டைகள், தொப்பி, டயபர் போன்றவற்றை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் குழந்தைக்கு தேவையான உணவுப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தையை சுத்தம் செய்வதற்காக, ஒரு துண்டையும் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
கைக்குழந்தை என்றால் அடிக்கடி இயற்கை உபாதைகள் வருவது வாடிக்கையான ஒன்றுதான். ஆகவே அவற்றுக்கு தேவையான பொருட்களையும், சுத்தம் செய்யும் பொருட்களையும், எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. ரெடிமேட் துணி அல்லது டயப்பர்களை எடுத்து வைத்துக் கொள்வதோடு, மருந்து பெட்டியையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனாலும், குறிப்பாக காய்ச்சல், இருமல், சளி வாந்தி, பேதி உள்ளிட்டவற்றை குறைக்கும் மருந்துகளையும் அந்த பெட்டியில் வைத்திருப்பது மிக, மிக அவசியம். அதேபோல, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட சத்தான பழங்களின் ஜூஸ்களையும், அத்துடன் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் நன்று.
அதேபோல கைக்குழந்தைகளுக்கு தேவைப்படும் விளையாட்டு பொருட்களையும், எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. குழந்தையோடு இனிமையான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தையும், கவனத்தில் கொள்வது மிக, மிக முக்கியம்.