திருவள்ளூர் அருகே, மனைவி போன் செய்தபோது, அவருடைய போனை எடுத்து பேசாமல், தாமதப்படுத்தியதால், மனம் உடைந்த புது மனைவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைப்பது சகஜமான விஷயம் தான். ஆனால், அதற்கு இடையூறாக யாராவது இருந்தால், அவர்களுக்கு மிகுந்து போகும் ஏற்படும் ஆனால், தன்னுடைய கணவனே தன்னுடைய அழைப்பை அலட்சியப்படுத்தினால், பெண்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
அப்படி ஒரு சம்பவம் தான் திருவள்ளூர் பகுதியில் நடைபெற்று உள்ளது. திருவள்ளூர் அருகே திருமணமான 4 மாதத்தில் ஒரு இளம் பெண் தன்னுடைய கணவன் தன்னுடைய அழைப்பை அலட்சியப்படுத்தியதன் காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞருக்கும், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜீவிதா என்ற இளம் பெண்ணுக்கும், சென்ற மே மாதம் திருமணம் நடந்துள்ளது. கார்த்திக் மதுரவாயல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தான், புது மனைவியான ஜீவிதா தன்னுடைய கணவரான கார்த்திக்குக்கு போன் செய்து, தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், உடனடியாக வீட்டிற்கு வரவேண்டும் என்றும் அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து, கார்த்திக் மாலை 4:30 மணி அளவில் வீட்டுக்கு வந்தார்.
ஆனால் அப்போது வீட்டுக்கு சென்று பார்த்த போது கார்த்திக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஜீவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட கார்த்திக், அதிர்ச்சியில் உறைந்து போனார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். திருமணமான நான்கே மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால், வட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்ற வருவதாக தெரிகிறது.