பிறமதங்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றி தவறாக சித்தரித்தும் பிற மதங்களை அவமதிக்கும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டதாக முகமது சுஹைல் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் விசாரணையில் சென்னை பல்லாவரம் பகுதி மீனாட்சி நகரை சேர்ந்த முகமது சுஹைல் என்ற நபர் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மேலும் குற்றச்செயல்களுக்காக அவர் பயன்படுத்திய செல்போனும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு அந்த நபர் காவல் துறையின் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவு செய்ததாக அந்த நபர் மீது உனக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக உடனுக்குடன் புகார் அளிக்கும்படி காவல்துறையினரும் வலியுறுத்தி வருகின்றனர்.