விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள ஒட்டனந்தல் காலனியில் புதுமனை தெருவில் பொக்லைன் எந்திர ஓட்டுநர் கவிதாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சென்ற 2019-ஆம் ஆண்டு ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் ஒன்று பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அன்றைய இரவு நேரத்தில் வேலையை முடித்துவிட்டு கவிதாஸ் நடந்து சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை கவிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அதற்கு மூதாட்டி உடன் படாததால் கோபமடைந்த கவிதாஸ் பேனா கத்தியை கொண்டு மூதாட்டியை குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கானது சமீபத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. அதில் இவருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், 3000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.