fbpx

#கன்னியாகுமரி: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா.. காதலியை சந்திக்க பர்தாவில் மறைந்திருந்த இளைஞர்..! 

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குலசேகரத்தின் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்துகொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வந்துள்ளார். இதனை, கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர். 

அந்த நபரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து வந்தது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் இளைஞரிடம் விசாரித்ததில், அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், தனது காதலியை நேரில் பார்த்து பேச பர்தா அணிந்து வந்ததுள்ளதாக தெரியவந்தது. 

இதனையடுத்து அந்த வாலிபருக்கு எச்சரிக்கை விடுத்து, கண்டித்து காவல்துறையினர் அவரது பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

Baskar

Next Post

#சேலம்: லவ் டுடே திரைப்படம்.. தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு செல்போன் பரிமாற்றம்.. போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர்..!

Sat Jan 21 , 2023
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேலூர் மாதா கோயில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.  அப்போது லவ் டுடே படம் குறித்தும் பேசினார்கள். இதையடுத்து, இருவரும் செல்போனை மாற்றிக் கொள்ளலாமா என்று அரவிந்த் கேட்டுள்ளார். அதன்படி இருவரும் 2 வார காலம் செல்போனை பரிமாறிக்கொண்டுள்ளனர். […]

You May Like