fbpx

“அடி வயிறு பதறுதே…” வயசு கோளாறில் பிறந்த குழந்தை.! துடிக்க துடிக்க வெந்நீர் ஊற்றி கொலை செய்த தாய்.!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் தனது குழந்தையின் முகத்தில் வெந்நீர் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் மேல வெட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் நீது. இவர் திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதில் கர்ப்பம் தரித்துள்ளார் நீது. தனது கர்ப்பத்தை குடும்பத்தாரிடமிருந்து மறைத்து வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

இந்தப் குழந்தை பெற்றோர் மற்றும் குடும்பத்திற்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என பயந்த நீது தனது குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி குழந்தையை தனது வீட்டின் கழிவறைக்கு எடுத்துச் சென்ற அவர் சூடான நீரை குழந்தையின் முகத்தில் ஊற்றி துடிக்க துடிக்க குழந்தையை கொலை செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக நாடகமாடி இருக்கிறார்.

எனினும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நீத்துவை கைது செய்து விசாரணை செய்ததில் தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது

Next Post

மிக்ஜாம் புயலால் உங்கள் கார், இருசக்கர வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா..? உடனே இந்த நம்பருக்கு போன் அடிங்க..!!

Mon Dec 11 , 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் கார், இருசக்கர வாகனங்களில் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், தற்போது மழை வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை பழுது பார்க்க ஷோரூம் மற்றும் மெக்கானிக் கடைகளை நாடி வருகின்றனர். இந்நிலையில், பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், […]

You May Like