வேலூர் பாலமதி மலையில் பாறை இடுக்குகளுக்கு இடையே இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலை யடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளி வந்திருக்கின்றன.
வேலூரின் பாலமதி மலையில் இளம்பெண் ஒருவர் மர்மமாக இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை யடுத்து அங்கு வந்த காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியது. அந்தப் பெண்ணின் முகம் முழுமையாக சிதைந்து இருந்ததால் அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. மேலும் அவர் கழுத்தில் தாலி அணிந்து இருப்பதை வைத்து அவருக்கு திருமண மாகி இருக்கும் என்று உறுதி செய்தனர்.
பாகாயம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தீவிரமான விசாரணையில் இறங்கிய போலீசார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ரமேஷ்பாபு என்பவருடைய மகன் கார்த்தி (23) என்பவரை அழைத்து சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து காவல்துறையினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த விசாரணையில் இறந்த பெண் சிதம்பரம் பகுதியைச் சார்ந்த குணப்பிரியா என்று தெரியவந்துள்ளது . இவரும் கார்த்திக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற உண்மையையும் காவல்துறைக்கு தெரிய வந்திருக்கிறது.
பேஸ்புக்கின் மூலம் பழகிய இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்து இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேலூருக்கு வந்த குணப்பிரியா,கார்த்திக் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்டு தன்னுடன் வாழ வேண்டும் என்று வற்புறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் குண பிரியாவை கடுமையாக தாக்கி கொலை செய்துவிட்டு அவரது முகத்தை சிதைத்து இறந்த உடலை பாறைகளுக்கு இடையே வீசிவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து கார்த்திகை போலீசார் கைது செய்தனர்.