பொதுவாக, அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 90ஸ் கிட்ஸ் குழந்தைகள், அதாவது, இன்றைய இளைஞர்கள், அவர்களுடைய பள்ளிப் பருவத்தில், நிச்சயம் இதனை சாப்பிடாமல் இருந்திருக்கவே முடியாது. அப்போது விளையாட்டாக சாப்பிட்ட இந்த பேரிக்காயில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்திருப்பதற்கான வாய்ப்பில்லை.
நாம் அனைவரும் பள்ளி செல்லும் பருவத்தில் இதனை வேண்டா வெறுப்பாக கூட வாங்கி சாப்பிட்டு இருப்போம். அப்போது இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது நமக்கு தெரிந்திருக்கவில்லை.
இந்த பேரிக்காயில், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக காணப்படுகிறது. இந்த பேரிக்காயை சாப்பிடுவதால், உடலில் எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, இதனை ஜூஸாக குடிப்பதை விட, துண்டுகளாக நறுக்கி, மென்று சாப்பிடுவதில் அதிக நன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேரிக்காயை உண்பதால், ரத்தத்தில் இருக்கின்ற கொழுப்பு கரைந்து, ரத்தத்தை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த பேரிக்காயில், புற்றுநோய் திசுக்களை அகற்றும் சக்தி உள்ளது. புரதம், மாவு பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து என்று அனைத்து விதமான சத்துக்களையும் தன்னோடு கொண்டிருக்கும் பேரிக்காயை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.