மூணாறில் உள்ள ஒரு பள்ளியில், வழக்கம் போல் பள்ளி முடிந்து, மாணவர்கள் வீட்டிற்க்கு சென்றுள்ளனர். அப்போது, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர் ஒன்றாக சென்றுள்ளனர். அவர்களின் அருகில் கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அந்த காரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் இருந்துள்ளனர். பின்னர், அந்த இரண்டு மாணவிகளும் காரில் ஏறி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், தங்களின் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். மாணவிகளை கடத்திச் செல்வதாக நினைத்த ஆசிரியர்கள், உடனடியாக தேவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த காரின் நிறம் மற்றும் பதிவு எண்களை அடிப்படையாக கொண்டு போலீசார் அந்த கரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, மூணாறு அருகே
உள்ள வட்டவடை பகுதியில் அந்த கார் செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மூணாறில் இருந்து சுமார் 48 கிலோ மீட்டர் தொலைவில், வட்டவடையில் உள்ள தங்கும் விடுதி முன்பு அந்த கார் நின்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அங்கு இருந்த மாணவிகளை மீட்டு போலீசார் விசாரித்த போது, மாணவிகளை 2 இளைஞர்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
மேலும், மாணவிகளுடன் அறையில் இருந்தது திருவனந்தபுரம் கிளிமானூர் பகுதியை சேர்ந்த 26 வயதான முகமது அலி மற்றும் கொல்லம் ஆயுர்கொக்காட் பகுதியை சேர்ந்த 26 வயதான அன்வர் ரஹீம் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும், சமூக வலைத்தளங்கள் மூலம் மூணாறைச் சேர்ந்த மாணவிகளிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி, மூணாறுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உடனடியாக பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்கள் செய்த காரியத்தால் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Read more: “புருஷன் நா இருக்கும் போது, உனக்கு இத்தன கள்ளக்காதலனா?” போலீசாரையே மிரள வைத்த போன் கால்..