Breaking : தமிழக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு..! முதல்வர் ஜோசப் விஜய் வசம் இத்தனை துறைகளா..? முழு லிஸ்ட் இதோ..!

cm vijay new

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.


இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. மேலும் சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.. தவெகவுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது.

இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இன்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. தமிழக மக்கள் மாளிகை இந்த பட்டியலை வெளியிட்டது. அதன்படி முதலமைச்சர் விஜய், காவல்துறை, பொதுநிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன், ஆட்சிப்பணி, வருவாய், குடிநீர் வழங்கல், வனம், சிறப்புத்திட்ட அமலாக்கம் மற்றும் உள்துறை ஆகிய துறைகளை முதல்வர் ஜோசப் விஜய் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை ஒதுக்கீடு

என். ஆனந்த் – ஊரக வளர்ச்சிதுறை, நீர்வளத்துறை
செங்கோட்டையன் – நிதித்துறை
அருண்ராஜ் – மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை
நிர்மல் குமார் – மின்சாரத்துறை, சட்டத்துறை
ஆதவ் அர்ஜுனா – விளையாட்டுத்துறை, பொதுப்பணித்துறை
ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித்துறை, தமிழ் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பத்துறை
வெங்கட் ரமணன் – உணவு பாதுகாப்புத்துறை, பொது விநியோகத்துறை
கீர்த்தனா – தொழில்துறை
டி.கே. பிரபு – சுரங்கம், கனிமவளத்துறை

Read More : சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று காரணமாக குதிரை உயிரிழப்பு..! மனிதர்களுக்கு பரவுமா..?

RUPA

Next Post

எவ்வளவு செலவு செய்தாலும், ஒருபோதும் பணத்தை இழக்காத ராசிகள் இவை தான்..! உங்கள் ராசி இதில் உள்ளதா..?

Sat May 16 , 2026
ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவமான இயல்பும், நிதி சார்ந்த போக்கும் உண்டு. குறிப்பிட்ட சில ராசிகளைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு செலவு செய்தாலும், அந்தப் பணம் ஏதோ ஒரு வடிவில் மீண்டும் அவர்களிடமே வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக குரு மற்றும் சுக்கிரனின் அருளைப் பெற்ற ராசிகளுக்கு அதிக செல்வமும், வாய்ப்புகளும், அதிர்ஷ்டமும் அமையும் என்று கூறப்படுகிறது. அத்தகைய அதிர்ஷ்டம் வாய்ந்த ராசிகளைப் பற்றி இப்போது அறிந்துகொள்வோம். ரிஷபம் […]
horoscope yoga

You May Like