தற்போது இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சப்பாத்தி என்பது தினசரி உணவாக மாறிவிட்டது.. உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் சப்பாத்தி உதவும் என்று நம்பப்படுகிறது.. குறிப்பாக வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி6 மற்றும் பி9, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் சப்பாத்தியில் நிரம்பியுள்ளது.. சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. ஆனால் சப்பாத்தி சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியுமா?
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நான்சி டெஹ்ரா இதற்கு பதிலளித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “நார்ச்சத்து மற்றும் புரதம் குறைவாக உள்ள உணவுகளில் இருந்து அதிக கலோரிகளை உட்கொண்டால், உங்கள் வயிறு நிரம்பாது.. நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள்… இதனால் நீங்கள் அந்த உணவை அதிகமாக சாப்பிடுவீர்கள். அதிக உணவு = அதிக கலோரிகள்..
நீங்கள் எடை இழக்க விரும்பினால் ஒவ்வொரு உணவிலும் புரதத்திற்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்து, சில சாலட் மற்றும் கோதுமை; உருளைக்கிழங்கு; ஓட்ஸ்; அரிசி போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.. இது உங்கள் உணவை மிகவும் திருப்திகரமாக்கும்..
ஒரு சப்பாத்தியில் 120 கலோரிகள் உள்ளது.. ஒரு நாளைக்கு 6 சப்பாத்தி சாப்பிட்டால், அது 720 கலோரிகள் கிடைக்கும். எனவே உணவை மிகவும் சீரானதாக மாற்றுவதற்கு நாம் குறைவான சப்பாத்தியை உட்கொள்ள வேண்டும். சாலட், தயிர், பருப்பு வகைகள் மற்றும் பிற காய்கறிகளை சேர்த்து சப்பாத்தியை சாப்பிட வேண்டும்.. நீங்கள் முழுவதுமாக சாப்பிடாமல் இருக்க வேண்டியதில்லை. புத்திசாலித்தனமாகவும் புரிதலுடனும் உணவுகளை இணைக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..