கார், பைக் விலை மேலும் உயர வாய்ப்பு – காரணம் என்ன???

தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் வரையிலான வண்டிகளுக்கு 10% வரியும், ரூ.1லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு 12% வரியும் விதிக்கப்பட உள்ளது. 5 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கு 12 சதவீதம் வரை வரி உயர்வும் , 5 முதல் 10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரை வரி உயர்வும், 10 முதல் 20 லட்சம் வரையிலான கார்களுக்கு 15 சதவீதம் வரையும் அதற்கு மேல் 20 சதவீதம் வரையும் சாலை வரிகள் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி உயர்வு மூலம் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை 5 சதவீதம் வரை உயரும் என்றும், இதனால் அரசுக்கு வரி வருவாய் 6,674 கோடியிலிருந்து கூடுதலாக சுமார் 1,000 கோடி வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சாலை வரி உயர்த்தப்படும் பட்சத்தில் இருசக்கர வாகனங்களின் விலை குறைந்தது 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலும் நான்கு சக்கர வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 50,000 ரூபாய் வரையிலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

ஆதிபுருஷ் பட சர்ச்சையை அடுத்து நேபாளம் அதிரடி முடிவு

Tue Jun 20 , 2023
ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலைக் குவித்துவருகிறது. இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ஆதிபுருஷ் திரைப்படம் தொடர்பான விமர்சனம் மற்றும் சர்ச்சைகள் குறித்து சி.பி.எஃப்.சி. கவனத்தில் கொண்டுள்ளதாகவும், மக்களின் உணர்வுகளை புண்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். படத்தின் சில வசனங்களை மாற்ற எழுத்தாளரும், இயக்குநரும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர், இவை அனைத்தும் தனது மேற்பார்வையில் நடைபெறும் […]
WhatsApp Image 2023 06 16 at 16.06.50

You May Like