சற்று முன்…! பொதுச்சொத்தை சேதப்படுத்திய தவெகவினர் மீது நாகையில் வழக்குபதிவு…!

tvk vijay speech trichy

நாகையில் பரப்புரை செய்த விஜயை பார்க்க வந்தவர்கள் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. தவெக தொண்டர்கள் அதிகளவில் சுற்றுச்சுவரில் ஏறியதால், சாய்ந்ததாக புகார் அளிக்கப்பட்டது. நாகை – புத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பரப்புரை செய்தபோது விதிமுறைகள் மீறல் ஈடுபட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த வாரம் திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாகை மற்றும் திருவாரூரில் விஜயின் பிரச்சாரத்திற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே தொண்டர்களின் செயலால் விஜய் கடும் அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. நேற்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் பிரச்சாரம் செய்த பது கட்டுப்பாட்டை மீறி தொண்டர்கள், கோவில் சுவர்கள் மீது ஏறி சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த‌ நிலையில் நாகையில் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மண்டபத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய த.வெ.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரத்தின்போது மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீது த.வெ.க.வினர் அதிகளவில் ஏறியுள்ளனர். த.வெ.க.வினர் அதிகளவில் ஏறி அமர்ந்ததால் பாரம் தாங்காமல் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் விழுந்தது. நிபந்தனைகளை மீறி தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக த.வெ.க.வினர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தங்கத்தை விடுங்க..!! வெள்ளியில் இப்படி முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்..!! இதுதான் சரியான நேரம்..!!

Sun Sep 21 , 2025
இன்றைய பொருளாதார சந்தையில், முதலீட்டாளர்கள் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளை நோக்கியே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பலரும் கண்டுக்கொள்ளாத ஒரு முதலீட்டு வாய்ப்பு, வெண்மையாக ஜொலிக்கும் வெள்ளியில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி முதலீடுகள் கொடுத்த லாபம், நம்மை ஆச்சரியப்பட வைக்கலாம். ஆபரணமா? ETF-ஆ? வெள்ளியில் முதலீடு செய்ய முடிவெடுத்தால், முதலில் மனதில் எழும் கேள்வி, அதை ஆபரணங்களாக வாங்குவதா அல்லது நிதியாக […]
Silver 2025

You May Like