சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் […]

மணிப்பூரில் வன்முறை பதற்றம் நிலவுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிவரை குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிள்ளது. மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற […]

இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்று பதவிக் காலங்களாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 4,078 நாட்கள் நிறைவடைகிறது. அதனடிப்படையில் இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதாவது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1964 முதல் […]

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் ; நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 4.86 லட்சம் 5ஜி அலைக்கற்றை பரிமாற்ற நிலையங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் […]

ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது இதய நோய், நீரிழிவு நோய், டிமென்ஷியா அல்லது மனச்சோர்வு காரணமாக ஏற்படும் ஆரம்பகால மரண அபாயத்தைக் குறைக்கும் என்று ஒரு புதிய உலகளாவிய ஆய்வு காட்டுகிறது. பல ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு பெரிய புதிய ஆய்வு, இதய நோய் […]