குஜராத்தில் சட்டவிரோதமாக ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை செய்த 2,352 பேரில் 741 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்; சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம், கிராம கமிட்டியினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். வரும் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி.எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டணி குறித்தும், எந்த தொகுதிகளைக் கேட்க […]

அதிபர் டிரம்பின் வரி கொள்கை சட்டத்தை விமர்சித்து வந்த எலான் மஸ்க், ‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார். […]

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் […]

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார். முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ’உங்களுடன் ஸ்டாலின்’ […]

ரஷ்யாவின் சில பகுதிகளில், பள்ளி மாணவியர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைய துவங்கி உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனாவே தற்போது பின்தங்கிவிட்டது.சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு […]

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான திறன் இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி மற்றும் கணிதப் பாடத்தின் கற்றலை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் […]

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் […]

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பணி நிரவலுக்கு உட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி ஆணை பெறுமாறு வற்புறுத்தக் கூடாது. அதேபோல், வற்புறுத்தி பணிநிரவல் […]