இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இனி டிஜிட்டல் கட்டணங்களை ஏற்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ தபால் நிலையங்களின் கணக்குகள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்புடன் இன்னும் ஒருங்கிணைக்கப்படாததால், டிஜிட்டல் கட்டணங்களைச் செயல்படுத்த முடியவில்லை. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சிறந்த நிதி […]

ஆந்திராவின் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 29 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சரஸ்சந்திரா என்ற பக்தர், லட்டுவில் இறந்த பூச்சி இருப்பதைக் காட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. லட்டுவில் பூச்சியைக் கண்ட சரஸ்சந்திரா, கோயில் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பதில் அளிக்காமல் […]

பாமகவுக்கு யார் தலைவர் என்பதில் தந்தை மகன் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள அன்புமணி தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்க உள்ளார். கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமானது. அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை […]