போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவான […]

கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு கல்லூரி ஊழியர்களால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜூன் 25 ஆம் […]

பாமக நிறுவனரை சந்தித்தது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அவர் சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மரியாதை நிமித்தமாகவே ராமதாஸை சந்தித்தாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆங்கில நாள்தழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய […]

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் உதவியாளராக பணிப்புரிய தற்போது தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் NGO/விலங்குகளுக்கான பாதுகாப்பு தங்குமிடம் அல்லது விலங்கு பாதுகாப்பு பணிகளில் அனுபவம் பெற்றிருக்க […]

நமக்கு ஆரோக்கியமானவை என்று நாம் நினைக்கும் சில அன்றாட உணவுகள் உள்ளன, ஆனால் அவை நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். இவற்றில் சில உணவுகளை நீண்ட காலம் சாப்பிடும் போது, உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் உள்ளன. இருதயநோய் நிபுணரும் இருதயநோய் துல்லிய மருத்துவ இயக்குநருமான டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், சுமார் 20 ஆண்டுகளாக இதய நோய்களுக்கு […]

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தை துவக்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற 15 எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம் இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடந்தும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு […]

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான். தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும். இந்த பொறுப்பில் நீண்ட காலமாக இருந்து வந்தவர் […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது அடுத்த கட்ட திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய், தற்போது முழுநேர அரசியலுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் உறுதியாகின்றன. இந்நிலையில், வருகிற ஜூலை 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள தலைமை செயலகத்தில் […]

700க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 8.5 லட்சம் போலி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பது சிபிஐ சோதனையில் தெரியவந்துள்ளது. சைபர் மோசடி மற்றும் ‘டிஜிட்டல் கைது’ வழக்குகளை தடுக்கும் வகையில் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-5 என்ற பெயரின் சிபிஐ சோதனை மேற்கொண்டது. போலி வங்கிக் கணக்குகள் மூலம் மக்களை ஏமாற்றிய குற்றவாளிகளின் மறைவிடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. […]