ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

1975 ஆம் ஆண்டு, ஜூன் 25 மற்றும் 26ம் தேதிக்கு இடைப்பட்ட இரவுகளில் இருந்து 1977 மார்ச் 21 வரை (21 மாதங்கள்), அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். இன்று இந்த அவசரநிலை 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, இந்திய அரசியலமைப்பின் 352 வது பிரிவின் கீழ் […]

அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை என்று கூறும் உளவுத்துறை அறிக்கையை ட்ரம்ப் நிராகரித்தார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் வெற்றிபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழிக்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தியிருக்கலாம் என்ற ஆரம்பகால உளவுத்துறை தகவல்கள் வெளியானதாக சிஎன்என் நிறுவனம் […]

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜோரியின் கெரி செக்டரில் உள்ள பாரத் காலா பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் பதுங்கியுள்ள 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். காலை 8 மணி முதல் 9 மணி வரை, பாரத் காலா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை இந்திய ராணுவம் கண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊடுருவல் முயற்சி கண்டறியப்பட்டவுடன், […]

நிலம், வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் போது பத்திரப்பதிவில் பொதுவாக மக்களிடையே இருக்கும் கவனத்தை விட, பட்டா பெறும் நடவடிக்கையில் இன்னும் அதிக கவனம் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய தவறுகள் கூட, பின் நாட்களில் நீண்ட கால நீதிமன்ற வழக்குகளாக மாறும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். நிலம் வாங்கும் முன் பின்பற்ற வேண்டியவை: விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றி, DTCP அனுமதியின்றி விற்பனை […]

திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ்வழியில்) 6-12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையை […]

நீண்ட நாள் குழப்பத்திற்குப் பிறகு, இஸ்ரேலும் ஈரானும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசுவதை நிறுத்திவிட்டன. இஸ்ரேல் தனது படைகளைத் திரும்ப அழைத்துள்ளது, அதே நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைப் பின்பற்ற ஒப்புக்கொண்டது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான உணர்வுகள் பரஸ்பரம்; எதிர்காலத்தில் அவர்களில் யாராவது ஒருவர் போர் நிறுத்தத்தை மீறினால், போர் மீண்டும் தொடங்கும். ஆனால் இப்போதைக்கு அது அமைதியாக இருக்கிறது, ஆனால் மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்துவிட்டதா? இல்லை! […]

மூன்று மாணவிகள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாக சென்றதால் ஒரு பெண் போக்குவரத்து காவலர் அவர்களை இடைமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் முக்கிய சாலையில், ஸ்கூட்டரில் வேகமாகவும், சட்டவிரோதமான முறையில் மூன்று பேர் ஒரே வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து காவலராக பணியாற்றும் பிரணிதா முஸனே என்ற […]

பாலியல் புகார் அளிக்க சென்ற கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர்கள் தாக்கிய விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாகிய நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி […]