2025-க்கு விடை கொடுத்து, நம்பிக்கைகள் நிறைந்த புதிய ஆண்டு 2026-ஐ வரவேற்றுள்ளோம். ஒவ்வொரு புத்தாண்டும் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளையும், புதிய கனவுகளையும், புதிய உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. “இந்த ஆண்டு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல், நிம்மதியாக இருக்க வேண்டும்” என்று அனைவரும் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட விருப்பங்கள் நிறைவேற வேண்டுமானால், புத்தாண்டு அன்று நாம் செய்யும் சில சிறிய விஷயங்கள் ஆண்டு முழுவதும் பலன் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். […]

தொழில்நுட்பம் வளர வளர, அதைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் நிலவும் பொதுமக்களின் உற்சாகத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், தற்போது 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டுப் புதிய வகை டிஜிட்டல் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் […]

உலக நாடுகள் 2026 புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் நோடா நகருக்கு அருகே புத்தாண்டு பிறப்பதற்கு சற்று முன்பாக, அதாவது இரவு 11.26 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது நோடா நகரின் கிழக்கே 91 கி.மீ தொலைவிலும், பூமிக்கு […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், புத்தாண்டின் முதல் முக்கிய நிகழ்வாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 6-ஆம் தேதி கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆண்டிற்கான மிக முக்கியமான அதிரடி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் மிக முக்கியமான […]

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த முறை பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே விண்ணை முட்டியிருந்தது. ஆனால், தற்போதைய அறிவிப்பில் ரொக்கப் பணம் இடம்பெறாதது பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ரூ. […]

2026-ஆம் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் தங்கம் சுமார் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, வரலாற்றில் இல்லாத வகையில் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த அதிரடி உயர்வு நடப்பு ஆண்டிலும் தொடருமா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகையில், சர்வதேச சந்தையில் தங்கம் […]

தமிழ்நாட்டில் வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் என இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை முறைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாடகை சட்ட மாற்றங்கள் இன்று (2026 ஜனவரி 1) முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன. வாடகை ஒப்பந்தங்கள் முதல் முன்பணம் (Deposit) வரை பல முக்கிய அம்சங்களில் நிலவி வந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பதிவு […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது உட்கட்சி கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு, கட்சி வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், விசிக-வில் செயல்பட்டு வரும் 144 மாவட்ட செயலாளர்களில் 48 பேரை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். மேலும், […]

புத்தாண்டு தினமான இன்று, இல்லத்தரசிகளுக்கு நிம்மதி தரும் செய்தியும், வணிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியும் ஒருசேர வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவை ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் […]

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கூட்டணி குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தவெக-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் எஸ்.ஐ.ஆர். (SIR) படிவங்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க நாமக்கல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கூட்டணி குறித்துப் பேசிய அருண்ராஜ், “தமிழக […]