இந்திய அரசால் தமிழ் மொழியை செம்மொழியாய் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 19ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இந்த நிலையில்தான் ’தமிழை’ செம்மொழியாக கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொழியின் பழமை, கிளைமொழிகளின் தாய்மொழி, பிறமொழிகளை சாராது, இலக்கிய இலக்கண வளம் உள்ளிட்ட 11 கோட்பாடுகள் செம்மொழிக்கான தகுதிகளாக […]

கிராம உதவியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, மதிப்பெண்கள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித் தகுதியில், எஸ்எஸ்எல்சியில் தமிழ் […]

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினமான இன்று அதிகளவில் […]

இந்தியாவில் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், வாழும் உரிமை, குடும்ப வாழ்வு, குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமைகள் LGBTQ+ தம்பதிகளுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA+ தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததை நீதிபதிகள் GR சுவாமிநியாதன் மற்றும் V லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. இருப்பினும், திருமணம் என்பது ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி […]

கோவில் திருவிழாவுக்கு அதிகளவில் கூட்டம் செல்வதும் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் இந்த கருத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இது வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். […]

சென்னை புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டம் நாளை (ஜூன் 06) நடைபெறுவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள  7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒரு பகுதியாக வருகிற 06.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் […]

இந்தியாவில் தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் அவசர காலங்களில், ரயில்வேயின் தட்கல் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றது. இருப்பினும், அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான […]

இந்திய கலாச்சாரத்தில் வாஸ்து சாஸ்திரம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வீடு கட்டுதல், திசைகள் மற்றும் இருப்பிடம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வாழ்க்கை முறையில் நல்லிணக்கம் மற்றும் செழிப்பை வழங்கும் கொள்கைகளை இது வழங்குகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பணத்தை எங்கு வைத்திருக்கிறோம் என்பது நமது நிதி நிலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பணத்தை எங்கே சேமிப்பது? வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் பணத்தை சேமிப்பதற்கு மிகவும் […]

பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா அல்லது கிரிக்கெட் வாரியமா? என கேள்வி எழுப்பிய கர்நாடகா உயர் நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஐபிஎல், பிசிசிஐ, பெங்களூர் ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டு 18வது ஆண்டில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை […]