உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில நாட்களில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி […]

தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு […]

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று சமீபத்திய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தனது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபே கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது, மேலும் அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு வணிக மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளுக்கு அட்டைகளை வழங்குகின்றன. சாதன பைண்டிங் மற்றும் UPI PIN அமைப்பு செயல்முறையானது, […]

SSC – CGL தேர்வுக்கு 8-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ B மற்றும்‌ குரூப்‌ C ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக 08.10.2022-க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி சூறைந்தபட்சம்‌ ஏதாவது ஒரு பாடத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன்‌ […]

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பணியாளர்களுக்கு தலா 1500 ஊக்கத்தொகை மற்றும் 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 12ம் தேதி வழங்குகிறார். இதுகுறித்து அனைத்து மாவட்டங்களும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்; தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து காலஞ்சென்ற 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌ பணிநியமனஆணை வழங்கப்படுகிறது. கடந்த 2012ம்‌ ஆண்டு முதல்‌ பணிபுரிந்து வரும்‌ 300 […]

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் செலுத்தலாம். 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற இணையதளம் வழியாகவும், நம்ம […]

இரவில் வியர்க்க வியர்க்க நடைபயிற்சி மேற்கொண்டதால் நடிகை குஷ்பூ 21 கிலோ எடை குறைத்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் ’’ நான் என்னால் எப்போதெல்லாம் நடக்க முடியுமோ முடிந்தவரை வொர்க்அவுட் செய்வேன் வழக்கமான வேலைகளை செய்வேன் அதிகமாக சாப்பிட மாட்டேன்.’‘ என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவர் சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்து உடலை ஃபிட்டாக்கியுள்ளார். […]

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்(TAFCORN) தற்போது காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான சம்பளம், வயது, கல்வித்தகுதி குறித்த விவரங்களை பார்ப்போம். தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில்(TAFCORN) Computer Programmer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Computer Programmerல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்கின்றன. சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜை என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்றுடன் விடுமுறை முடிவதால் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்புகின்றார்கள். சென்னை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கார்கள் ,தனியார் […]

விருதுநகர் மாவட்டத்தில் 5ஜி அலைக்கற்றை டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணன் கோவில் பகுதி 33 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து […]