fbpx

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அவர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு …

பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை https://www.tngasaedu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 12-ம் …

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன் படி, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது. அணிவகுப்பு ஊர்வலத்தில் …

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ‌.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு 4 ஆண்டு 6 மாதம் படிப்பும், …

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இன்று சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடைபெற்ற உள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்பினை அளிக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. …

முதல்வர் முக.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பின்புலமாக இருப்பதாக தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில், சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி …

ஏழாவது திருமணத்திற்கு மணமேடைக்கு வந்த மோசடி பெண், ஆறாவது கணவரின் புத்திசாலித்தனத்தால் போலீசில் சிக்கினார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும், மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற தரகர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் …

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில்.எவ்வித உயர்கல்வி படிப்புகளிலும் சேராத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 2021-22 ஆம் வருடம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில்.எவ்வித உயர்கல்வி படடப்பிலும்சேராத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநில திட்ட இயக்கத்தகல் மேலும் மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் …

வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறும் வகையிலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள தரச் சான்று விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ய அனுமதித்ததற்காக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராத தொகையை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் விதித்தது.

மேலும், பிளிப்கார்ட் நிறுவனத்தில் விற்கப்படும் 598 பிரஷர் குக்கர்களைப் பற்றி …

உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களில் 8,588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்கள் எந்தவித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதனால், உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அந்தந்த …