fbpx

தமிழகத்தில் இன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, …

டெல்லி, டிபன்ஸ் காலனி காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், அவரது மாமனார் குடும்பத்தினருக்கும் இடையே வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும் அவரது தாயாரும் அவரது மாமனாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது பெண் சப் இன்ஸ்பெக்டரின் தாயை அந்த பெண்ணின் மாமனார் கையால் தள்ள முயற்சித்தார். இதை கண்டு ஆத்திரமடைந்த …

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னுடைய நாட்டையும், மாநிலத்தையும் முன்னிறுத்தும் பிரதிநிதியாக நான் இருந்தது, மிக மிக பெருமைமிக்க மரியாதைக்குரிய தருணமாக எனக்கு இருந்திருக்கிறது. இந்த நேரத்தில், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நான் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். …

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு …

கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்ததும், ஆளுநரிடம் அரசியல் பேசியதாக கூறியதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.. மேலும் தான் பேசியது என்பது குறித்து தற்போது கூற முடியாது என்று ரஜினி கூறியது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.. தனது உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடப்போவதில்லை ரஜினி கூறியதில் இருந்தே பெரிதாக எந்த பேச்சும் எழவில்லை.. …

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பெரிய தெருவில் வசித்து வருபவர் ராமு (40). இவரது மனைவி சரிதா (27). இருவரும் 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் பெருமுகையில்  இருக்கும் தனியார் லெதர் கம்பெனியில் தொழிலாளியாக வேலை …

சென்னையில் தற்போது பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சியினால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அது போலவே பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழித்துவிட்டு அந்த இடங்களில் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புகளை குறிக்கும் வண்ண ஓவியங்களும் வரையப்படுகின்றன.

அந்தவகையில் …

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 8.2% உயர்ந்து 620.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் வெளிநாட்டு கடன் நிர்வாகப் பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021-22 குறித்த 28-வது நிலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021 மார்ச் இறுதியில், 573.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 …

தமிழகம் முழுவதும் மாநகர, மாவட்ட காவல்துறையின் சார்பில் சமூக ஊடக குழு தொடங்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Youtube, Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் உண்டாக்கி காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கவனிக்க காவல்துறை சார்பில் …

பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் என ‘புதுமைப் பெண்’ திட்டத்தை அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வரவேற்று பாராட்டியுள்ளார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக எம்பி ரவீந்திரநாத் சாய்ரச்சை பூஜையில் கலந்துகொண்டு ராஜா அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்தார். இதையடுத்து, தங்கரதம் இழுத்து முருகனை வழிபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் …