ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச்சீட்டு பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறைக்கு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தமுறை அறிமுகப்படுத்தப்பட்ட 2 மாதங்களில் 5.67 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பயன்படுத்தியுள்ளனர். 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறை மூலம் குறைவான கட்டணத்துடன் தேசிய நெடுஞ்சாலைகளை […]

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1050 கோடி அதிகம் ஆகும். விராட் கோலியின் முக்கிய வருமானம் கிரிக்கெட். இது தவிர, ஐபிஎல்லிலும் வருமானம் ஈட்டுகிறார். விராட் கோலி பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் அதிக பணம் சம்பாதித்து வருகிறார். விராட் கோலிக்கு மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது. இது தவிர விராட் கோலிக்கு குருகிராமில் ரூ.100 […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (வயது 100), மீண்டும் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் தான் அவர் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், நல்லகண்ணு முதலில் சென்னையில் உள்ள […]

பிரபல சமையல் கலைஞர் மற்றும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா எழுப்பியுள்ள திருமண மற்றும் கர்ப்பம் தொடர்பான சர்ச்சைக்கு, நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் சட்டத்தை மட்டுமே நம்புவதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல்வேறு பிரபலங்களின் சுபநிகழ்ச்சிகளில் […]

உலகளவில் யூடியூப் தளத்தின் சேவை சில மணிநேரம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை யூடியூப் தளத்தின் பயனர்கள் புதன் கிழமை இரவு எதிர்கொண்டுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் தினசரி அடிப்படையில் YouTube ஐ அணுகுகின்றனர். சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யப்பா லே-அவுட்டில் வசித்து வந்த பிரபல தோல் நோய் மருத்துவர் கிருத்திகா, மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் டாக்டர் மகேந்திரா 6 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கிருத்திகாவும், அவரது கணவர் மகேந்திராவும் மருத்துவர்கள். அறுவை சிகிச்சை நிபுணரான மகேந்திரா, கர்நாடகாவின் உடுப்பி, மணிப்பாலைச் சேர்ந்தவர் மற்றும் பெங்களூரில் உள்ள […]

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஆம், நிச்சயமாக. பிரதமர் நரேந்திர மோடி எனது நண்பர். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், இந்தியாவால் அதை ‘உடனடியாக’ செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் […]