fbpx

ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் முதன்மை கணக்கு பொது அலுவலகத்தில் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல் அல்லது குறைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம்.

அதற்கான சில கட்டணமில்லா எண்கள் …

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் செய்து குறிப்பில்; இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான ஹெல்மெட்டினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 …

இயற்கை எரிவாயு விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.இயற்கை எரிவாயு டெல்லியில் ஒரு கிலோ ரூ. 78.61 ஆகவும், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத்தில் ஒரு கிலோ ரூ. 81.17 ஆகவும், குருகிராமில் ரூ. 86.94 ஆகவும் கிடைக்கும். …

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆர்டர் செய்த ஒரு நபருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் வருகின்றனர். அந்த வகையில், கடந்த காலங்களில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆர்டர் செய்த சிலருக்கு அதற்கு …

இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022-ஐ மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் 02.09.2022 அன்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் வாகனங்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது இந்த விதிமுறைகள் பொருந்தும்.

இந்த விதிமுறைகளின்படி, நாட்டில் தங்கியிருக்கும் போது செல்லுபடியாக கூடிய பதிவுச் சான்றிதழ், …

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை 28 சதவீதமாக உயர்த்த இருந்து வருகிறது. சமிபத்தில் ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி மற்றும் DA நிலுவைத் தொகை கிடைத்துள்ளது. தற்போது மத்திய அரசின் மற்ற ஊழியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் …

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று சமீபத்திய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தனது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபே கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது, மேலும் அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு வணிக மற்றும் சில்லறை விற்பனை …

தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூ.4,835 ஆகவும் வெள்ளிவிலை 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாயாகவும் விற்பனையாகின்றது.

தங்கம் விலை கிராம் 60 ரூபாய் இன்று அதிகரித்துள்ளது. கிராம் விலை ரூ.4835 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

சவரன் விலை ரூ.480 அதிகரித்து ரூ.38680 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 2 நாட்களில் ரூ.1040 …

Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்தியாவில் E-commerce என அழைக்கப்படும் மின்னணு வர்த்தகமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது …

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் முதன்மையான துறையான வணிகவரித்துறை மூலம் தற்போது வரை 66,000 கோடியில், பதிவுத்துறை மூலம் 8,696 கோடி வருவாய் எட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வணிக வரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத்தொடர்ந்து வரி வருவாய் …