மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]

நீங்கள் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற பொருட்களை வைத்திருக்க வங்கியில் லாக்கரை வாடகைக்கு எடுத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர்கள் தொடர்பான விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த புதிய விதிகளின் கீழ், வாடிக்கையாளர் ஒரு புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம். ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், உங்களுக்கும் லாக்கருக்கும் […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வகை மோசடி குறித்து எச்சரித்துள்ளது.. எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதிவின்படி, செல்போன் எண்களை மாற்றும் மோசடியில் தற்போது சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.. மோசடி செய்பவர்கள் வெற்றி பெற்றால், வங்கி எச்சரிக்கைகள் அவர்களின் எண்ணுக்குச் செல்லும், இதனால் கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து […]

ஏழை, எளிய மக்களுக்கு இந்திய அரசு, தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலையங்கள் சிறிய தொகையில் முதலீடு செய்யக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இவை அரசு உத்தரவாதம் பெற்றவை என்பதால், மக்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். அந்த வகையில், தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் 7.1% வட்டி வழங்குகிறது. ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து, […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. சமீபத்திய தகவல்களின்படி, அகவிலைப்படியில் 3% அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் தற்போதைய அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக அதிகரிக்கும். இந்த மாற்றம் AICPI (அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு) அடிப்படையில் கணக்கிடப்படும். விதிகளின்படி, இந்த அதிகரிப்பு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும், […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இப்போது நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் அதே நேரத்தில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக UPI பயன்படுத்துபவர்கள் மோசடி செய்பவர்களின் எளிதான இலக்காக மாறி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாவதைத் தவிர்க்க, சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனினும் இந்த 6 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது சைபர் மோசடிகளிலிருந்து சில பாதுகாப்பை அளிக்கும். ஒவ்வொரு UPI பயனரும் பின்பற்ற வேண்டிய […]

தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌.. மசாலா பொருட்கள்‌ தயாரித்தல்‌, காப்பிக்‌ கொட்டை அரைத்தல்‌, அரிசி […]