பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே தனது மூக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் ’முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . பின்னர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் நடித்து அந்த படங்கள் வெற்றியானதை அடுத்து மீண்டும் தமிழில் பீஸ்ட் திரைப்படம் நடித்தார். தெலுங்கில் மகரிஷி, ராதே ஷ்யாம் , ஆச்சார்யா , ஒக்கலைலா […]
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியை நோக்கி நகர்வதற்கு வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி தனது நன்றியை தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடித்தது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.5 […]
குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு அதிகரிக்கப் பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினர். பாரதி புத்தகாலயம் சார்பில் சிறுவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘அரும்பு’ புத்தக விற்பனையகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னாள் மேற்குவங்க ஆளுநரும் காந்தியடிகள் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய வெற்றிமாறன், ‘வாழ்வில் வாசிப்பு என்பது இன்றியமையாத குணம், டிஜிட்டல்மயனான பிறகு அறிவுக்காகப் […]
ஐதராபாத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஸ்டூடியோ திறந்துள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிரஞ்சீவி ஸ்டூடியோவை திறந்து வைத்தார். நடிகர் அல்லு அர்ஜுன்மற்றும் குடும்பத்தினர் ஐதராபாத் அருகே தெலுங்கு திரைப்பட ஸ்டூடியோ நிறுவனத்தை திறந்து வைத்துள்ளனர். தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரித்து வருகின்றது. மேலும் […]
ஏற்கனவே ஏராளமான புத்தக ரசிகர்கள், கல்கியின் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கதையாக படித்து மகிழ்ந்துள்ளார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு படத்தில் இடம்பிடித்துள்ளார்களா என்பதை பார்ப்போம்.. கல்கியின் பொன்னியின் செல்வன் கதை ரசிகர்களுக்கு பரிட்சயம் . கதை தெரிந்ததுதான் இருந்தாலும் திரையில் தோன்றும் காட்சிகளாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. படம் வெளியானதும் திரை அரங்குகள் அனைத்தும் ’’ஹவுஸ் புல் ’’ ஆனது. பார்த்த ரசிர்கள் ஒவ்வொருவரும் […]
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகின் 60 ஆண்டுகால கனவை, இயக்குநர் மணிரத்னம் சாத்தியமாக்கியிருக்கிறார். 5 பாகங்கள் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதுவும் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம், கோலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2 நாட்களில் உலக […]
இயக்குநர்கள் ராஜமௌலியும், மணிரத்தினமும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை என்றும், படைப்பாளிகளின் படைப்புகளை ரசிக்க வேண்டுமே தவிர, ரசிகர்கள் சண்டையிட்டு கொள்ளக் கூடாது என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் காவல்கிணறு சக்கரவர்த்தி திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பார்க்க நடிகர் சரத்குமார் வந்திருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை சிறப்பாக இயக்கி உள்ளார் மணிரத்தினம். ‘பாகுபலி’ சிறந்ததா, ‘பொன்னியின் செல்வன்’ சிறந்ததா என்கிற போட்டியே […]
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் கதையான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் படத்தை இயக்கிய மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் […]
புதிதாக திருமணம் செய்துகொண்ட ரவீந்தர் மனைவி மகாலட்சுமியை விட்டு பிரிந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக தகவலுடன் புகைப்படம் லீக் ஆகி உள்ளது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன் . புதியதாக திருமணம் ஆன ஜோடி இன்றுவரைட்ரெண்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் மனைவியை பிரிந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இது தொடர்பான போட்டோ ஒன்றும் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்கு பின்னர் […]
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா முன்னாள் காதலரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்ற மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்துவிட்டதாக இருவரும் கடந்த ஜனவரி மாதம் […]