போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித் உயிரிழப்பு” சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தகவல். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் […]

சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 3வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, 37 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு வாசல் கதவு திறக்கப்பட உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவுக்காக மிகுந்த விமர்சையாக தயாராகி வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 37 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மேற்கு வாசல் கதவு இம்முறை திறக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் 300 கோடி […]

திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டிகளும் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த பெரும் […]

விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சியை தமிழக அரசு வழங்க உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதனை […]

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த 10 பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சனிக்கிழமை இரவு அஜித் குமார் […]

சிவகங்கை லாக் அப் மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதற்கிடையெ பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சமீபத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் […]

அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கழுத்து, தொடை என பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது […]