மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் […]

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குற்றப் பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவ இருப்பதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரையிலான பகுதிகளில் கடலோர காவல் […]

சென்னையில் ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 266 கி.மீ. நீளத்துக்கு 375 பேருந்து சாலைகள், 2,170 கி.மீ. நீளத்துக்கு 13,909 உட்புறச் சாலைகள் உள்ளன. […]

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் […]

மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய கட்டிடங்களை வரன்முறை படுத்த கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவு. தமிழகத்தில், 2011க்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த திட்டம், 2020 பிப்., 18ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட மனுக்கள், பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன. மீண்டும், ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. […]

ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவை கலைக்க முயன்றதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்த மசோதாவை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய கொண்டு வந்தது. 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை மற்றும் 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு […]

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது […]