தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அருகிலுள்ள பல்லாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குருசாமி (40). இவர், தனது சகோதரர் முனியசாமியின் மகன்களான சிறுவர்கள் முகிலரசன் (5), சுமித்ரன் (3), மற்றும் தனது சகோதரி முத்துலட்சுமி (48) மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண் ஆகிய நால்வரையும் அழைத்துக்கொண்டு, விளாத்திகுளத்திலுள்ள தனது உறவினர் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கடலோர மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களைக் கைது செய்வதும், பல லட்சம் மதிப்புள்ள அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி கணக்குகள் மற்றும் ஆதரவு நிலப்பாடுகள் குறித்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மேற்கு மண்டலமான கொங்கு பகுதியில் அதிமுக தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜாமணி நேரில் சந்தித்து […]
தருமபுரியில் பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை சித்திரவதை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தருமபுரி சாலை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மனைவி எழிலரசி (23). இந்தத் தம்பதியினருக்கு 3 வயதில் சிவதர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் (28) என்பவருடன் எழிலரசிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தனது கணவர் சிவசங்கரின் எச்சரிக்கையையும் மீறி, கடந்த […]
கடந்த 2024 மார்ச் மாதம், சுமார் 17 ஆண்டுகாலமாக தான் கட்டிக் காத்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்த சரத்குமார், தற்போது அந்த முடிவினால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியை இணைத்த போது அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், தற்போது அவர் நடத்தப்படும் விதமும் பெரும் இடைவெளியை கொண்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர். பாஜகவில் இணைந்த பிறகு, தேசிய […]
மத்திய அரசின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் மற்றும் செயலாளர் சாத்தையா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் லாரிகள் ஓடாது என அறிவித்துள்ளனர். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2025 நவம்பர் 11-ம் தேதி, இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் […]
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த மௌனத்தை உடைத்து, வி.கே.சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க தயாராகிவிட்டார். ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என பொறுமை காத்து வந்த அவர், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்டப் பணிகள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் யுத்தம் இப்போதே தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக, மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு நிதி என ஒரே தவணையாக ரூ.5,000 வழங்கி மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக மத்திய பாஜக அரசு ஒரு பிரம்மாண்டமான நிதித் திட்டத்தை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வாக்காளர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் […]
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்.பி-யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாணிக்கம் தாகூர், இனிவரும் காலங்களில் எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், அவரது இந்த அறிவிப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸிற்குப் பங்கு வேண்டும் என்றும், திமுக […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள், தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கொள்கை ரீதியான விமர்சனங்களை தாண்டி, தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கங்கள் குறித்துப் பொதுவெளியில் தரம் தாழ்ந்த முறையில் பேசியது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், பொது […]

