தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. அப்போது பேசிய அவர் கள்ளக்குறிச்சி மாவத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. ரிஷி வந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டப்படும்.. உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவி. ரூ.10 கோடியில் புதிய சிப்காட் […]

ஜனவரி 20-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று அவர் அறிவித்துள்ளார். ஜனவரி 20-ம் தேதியே அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் “ நாங்கள் எந்த மரபையும் மாற்ற மாட்டோம் எனவும், ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம் […]

பாமக கவுரவ தலைவராகவும் ராமதாஸ் ஆதரவாளராகவும் ஜி.கே மணி இருந்து வருகிறார்.. ராமதாஸ் தரப்பில் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்தும் ஜி.கே மணி விளக்கம் அளித்து வருகிறார்.. எனினும் ஜி.கே மணி உள்ளிட்டோர் அன்புமணியை தவறாக வழிநடத்துவதாக அன்புமணி தொடர்ந்து விமர்சித்து வந்தார். மேலும் தன்னைப் பற்றி ராமதாஸிடம் அவதூறாக பல கருத்துகளை சொன்னதாகவும், இதன் காரணமாக தந்தை மகன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் அன்புமணி தரப்பு கூறுகிறது.. மேலும் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் புதிய கட்சி நோக்கி நகர்வதும் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இழந்த ஆட்சியை மீட்டெடுக்க பாஜகவுடனான கூட்டணி மற்றும் புதிய தேர்தல் வியூகங்களுடன் இபிஎஸ் தரப்பு தயாராகி வரும் நிலையில், கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் […]

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், தனது அரசியல் வருகையின் மூலம் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளார். பல ஆண்டுகளாக நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த 2024 பிப்ரவரி 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) எனும் கட்சியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை சமூகப் பணிகளிலிருந்து அரசியல் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (TNSTC) அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஒரே நாளில் நடந்த இரு வேறு விபத்துகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் […]