fbpx

இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வீணாக கடலில்
கலந்து கொண்டு வரும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். …

பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நிதியுதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத …

எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுவதாக எம்.பி. திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாஜக அரசு மாநில அரசுகளை நசுக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவித முனைப்பையும் அவர்கள் காட்டவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், வீட்டுக்கு …

கருமுட்டை வழக்கு தொடர்பாக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோடு சுதா மருத்துவமனையின் பதிவை ரத்து செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தும் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் …

இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை புரதான சின்னங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தொல்லியல்துறை சார்பில் இந்தியா முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள …

தமிழகத்தில் வரும் 9-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 05.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ …

திருச்செந்தூர் அருகே காதலியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் வனசந்தியா (20). இவர் உடன்குடி அருகே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கார்த்திக் (21). இவர், ஆட்டோ ஓட்டுநராக …

சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி நள்ளிரவில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு பிரிவினர், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் …

5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பேச ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு …

தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இந்த சூழலில் தமிழகத்தில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக: …