தமிழகத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்.1) முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை 74 கி.மீ நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம் அமலாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணம் […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி […]

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரங்களின் மாநாட்டை நடத்தினார்.. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பேசிய அவர் “ இந்த பூமியை சமநிலைப்படுத்துவதில் மரத்தின் பங்கு மகத்தானது.. இயற்கையின் படைப்பு பெரிய வியப்பு.. எல்லா உயிர்களும் ஆக்ஸிஜனை சுவாசித்து நச்சுக்காற்றை வெளியிடும்.. மரங்கள், தாவரங்கள் மட்டும் தான் நச்சுக்காற்றை சுவாசித்து விட்டு ஆக்ஸிஜனை வெளியிடும்.. அதனால் […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.. குறிப்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அண்ணாமலை குறித்து விமர்சித்தால் அது கூட்டணியில் சலசலப்பை […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா? முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் […]

தனது ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்.. அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8-ம் தேதி நாடு திரும்புகிறேன்.. தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் […]

கடந்த 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000-ஐ நெருங்கியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் […]

தொலைதூரக் கல்வி மூலம் கால்நடை பராமரிப்பு, கோழி வளர்ப்பு மற்றும் இவை சார்ந்த துறைகளில் தேவைப்படும் திறன்மிக்க மனித சக்தியை உருவாக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் மூலம் தொழிற்பயிற்சி அளிப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி […]

விவசாய மின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23.09.2021 அன்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு 1,00,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்கள். […]