தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 -ன் படி […]

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருபுறம் கூட்டணி வியூகம், மறுபுறம் தீவிர தேர்தல் பரப்புரை என களப்பணிகளில் இறங்கியுள்ளன. திமுக மற்றும் அதிமுக இடையே மட்டுமே போட்டி என்ற நிலை மாறி, விஜய்யும் அரசியல் களத்தில் நுழைந்துள்ளதால், இம்முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுக தேசிய கட்சியான பாஜகவுடன் […]

தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, நெல்லை மாவட்டத்தில் முக்கிய அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளார். அவர் வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ.) இருக்கிறார். இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாகவும், 2001-இல் சுயேட்சையாகவும், 2006 மற்றும் […]

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 24 வயதான சந்தோஷ், சூலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு முன்பு இவருக்கும், தேவி என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஜாதகம் பொருந்தாத காரணத்தினால், இருவரின் வீட்டாரும் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். தேவி கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவரைத் திருமணம் செய்துகொண்டு […]

தூத்துக்குடி மாவட்டம், தாமரை மொழிப் பகுதியில் முன்விரோதம் காரணமாக உறவினரைக் கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஒருவரை, பழிவாங்கும் நோக்கில் ஒரு கும்பல் சினிமா பாணியில் காரை மோதி வீழ்த்தி, சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ தாமரை மொழிப் பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் (34) என்பவர், தனது உறவினரான கந்தையா (48) என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை […]

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகளைத் தயார் செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று (அக்.11) அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில், பூத் ஏஜெண்டுகளுக்கான பிரம்மாண்ட […]

பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு டிகிரி முடித்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல துறைகளில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரு காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மீது ‘பிக்கப்’ வேன் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]